News May 25, 2024
திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்.!

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 54க்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியிணை இன்று மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வார்டு எண் 65க்கு உட்பட்ட வயர்லெஸ் சாலையில் மின்கம்பி அமைப்பது சம்பந்தமாக இளநிலை பொறியாளர் அவர்களிடம் கலந்தாலோசித்து, மின்கம்பி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.
Similar News
News July 5, 2025
திருச்சி: ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்த லாரி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள அடைக்கம்பட்டி பகுதியில் இன்று பெரம்பலூர் பகுதியில் இருந்து துறையூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் நெல் மூட்டைகள் சாலையில் சிதறின. ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் துறையூர் – பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News July 4, 2025
உப்பிலியபுரம்: டிரைபல் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் “சிக்கள் செல், தலசீமியா மரபணு” நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க, உப்பிலியபுரம் மற்றும் துறையூர் பகுதியில் ‘ஒரு டிரைபல் கவுன்சிலர்’ பணியிடம் ரூ.18,000 ஊதியத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் விவசாய பயிர்கள் சாகுபடியில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் ஷீமா இன்சூரன்ஸ் கம்பெனி என்ற காப்பீடு நிறுவனத்தால் பயிர்க்காப்பீடு செயல்படுத்தப்படவுள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.