News June 3, 2024
திருச்சி:சிறுமியின் விபரீத செயல்

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞா் தன்னிடம் பேசாததால் மனஉளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Similar News
News August 21, 2025
திருச்சி: தமிழக காவல்துறையில் வேலை

திருச்சி மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
News August 21, 2025
திருச்சி: மாவட்ட விதைச்சான்று இயக்குநரகம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சன்ன ரக நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரக விதைகளை விவசாயிகள், விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரப்பெற்ற விதைகளில் விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட விதைச்சான்று இயக்குனரகம் அறிவித்துள்ளது.
News August 21, 2025
திருச்சி: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <