News May 7, 2024

திருச்சிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

image

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 5, 2025

ஸ்ரீரங்கம் பெருமாள் தரிசனம் இல்லை

image

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மேலும், 9-ம் தேதி திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு மேல் தான் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலும் என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

திருச்சி: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீதம்

image

வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (32) சேல்ஸ்மேன் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் அதிக பணம் இழந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News July 5, 2025

திருச்சி: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!