News January 21, 2025

திருக்கோவிலூர் மருத்துவமனைக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிறந்த சேவைக்காக சிறப்பு விருதினை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் (பொ) டாக்டர் ராஜவிநாயகத்திடம் இன்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு, தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் அருண்தம்புராஜ் உடனிருந்தார்.

Similar News

News March 9, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

FLASH: கல்வராயன் மலை அருகே சாக்கு பையில் சடலம்!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மயம்பாடி ஆற்றில், கோணிப் பையில் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் யார்? கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!