News May 26, 2024
திருக்கோவிலூர் அருகே சாலையோரம் இறந்து கிடந்த மான்

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே சாலையோரம் மான் ஒன்று காயங்களுடன் நேற்று (மே 25)செத்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செத்து கிடந்த மானை கைப்பற்றி அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மான் அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் இருந்து வழிதவறி வந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
Similar News
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை இங்கே <
News August 26, 2025
கள்ளக்குறிச்சி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.த னியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிலவரம்

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ₹8,500க்கும், மக்காச்சோளம் ₹2,369க்கும், மணிலா ₹7,930க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.