News March 23, 2026
திருக்கோவிலூரில் மீண்டும் பொன்முடிக்கு வாய்ப்பு?

விழுப்புரம்: திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக து.பொதுசெயலாளருமான பொன்முடி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு இன்று வரையிலும் அளிக்கவில்லை. தனது 19 ஆண்டுகால அரசு கல்லூரி பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியின் அழைப்பின் பேரில் பல வருடங்களாக திமுகவில் பயணித்து வரும் பொன்முடிக்கு, திமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்குமா என திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Similar News
News April 5, 2026
விழுப்புரம்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

விழுப்புரம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News April 5, 2026
விழுப்புரம் அருகே காவல்துறை அதிரடி!

திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் அண்டராயநல்லூர் தென் பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
News April 5, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம் !!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(04) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (05)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


