News January 7, 2025
திருக்குவளை பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு

சூழல் பாதுகாப்பு அனைவரது பொறுப்பு என்ற மையக்கருத்தைக் கொண்டு மாநில அளவில் கோயமுத்தூர் மாவட்டத்தில் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் தேச பக்தி பாடல் பிரிவில் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் க.பா.ஞாழல் பங்கேற்று சிறப்பிடம் பெற்றார். இவருக்கு பள்ளி சார்பில் நேற்று பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 31, 2026
நாகை: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் வரும் பிப்.1-ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 31, 2026
நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (ஜன.31) வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வங்காரமவாடி, வாழமங்கலம், நாகூர், அக்கரைப்பேட்டை, கிடாரங்கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


