News October 1, 2024

திருக்குறள் முற்றேந்தல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் முற்றேந்தல் போட்டி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள், tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் அக்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27233969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 20, 2025

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் மயங்கி விழுந்து பலி

image

மாமல்லபுரத்தில் நேற்று(ஆகஸ்ட் 19) இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண் சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகிழ்ச்சியான சூழலில் நடந்த இச்சம்பவம், திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News August 20, 2025

செங்கல்பட்டில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

இ- ஸ்கூட்டர் பெற மானியம்

image

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!