News December 31, 2025
திருக்கழுகுன்றத்தில் நாளை திருப்படி உற்சவ விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டின் தொடக்க நாளான நாளை காலை 9 மணிக்கு திருப்பதி உற்சவ விழா மேளதாளங்களுடன் ஓதுவார் குழுக்களுடன் திருமுறைகள் பாடப்பட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News January 1, 2026
செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

இன்று (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
செங்கல்பட்டில் இன்று மழை வெளுக்கும்!

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று செங்கல்பட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.
News January 1, 2026
செங்கை: 6 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்

சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்ற 6 வயது சிறுவனுக்கு, அங்கிருந்த 16 வயது வடமாநில சிறுவன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில், அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


