News June 4, 2024
திரிணாமுல் காங்,. தொடர் முன்னிலை

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 10 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ் அங்கு படுதோல்வி அடையும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 12, 2025
நக்சலைட்கள் அனைவரும் சரணடைய வேண்டும்: அமித்ஷா

சத்தீஸ்கரில் 10 நக்சலைட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, CRPF, கோப்ரா கமாண்டோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கூட்டாக நடத்திய ஆபரேஷனில் தலைக்கு ₹1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சலைட் மனோஜ் உள்பட 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். விதித்த கெடுவுக்குள் அனைவரும் சரண்டர் ஆகணும். சிவப்பு பயங்கரவாதத்துக்கு மார்ச் 31 தான் கெடு என்று X-ல் எச்சரித்துள்ளார்.
News September 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 12, 2025
₹450 கோடியில் அமையும் தொழிற்சாலைக்கு CM அடிக்கல்

ஓசூரில் ₹450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் CM உறுதியளித்தார்.