News March 29, 2026
திராவிட கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் நிலை என்ன?

தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகம். பெண்களை குறிவைத்தே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், திமுகவில் கீதா ஜீவன் உள்பட 18 பேரும், அதிமுகவில் கோகுல இந்திரா உள்பட 20 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தலைநகர் சென்னையில் ஒரு பெண் வேட்பாளரை கூட திமுக நிறுத்தவில்லை. அதேநேரம், தவெக 23, நாம் தமிழர் கட்சியில் 117 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 11, 2026
அரசியல் களத்தில் இதை நீங்க மிஸ் பண்றீங்களா?

வீட்டு வாசல்ல அடிக்கடி பிரசார நோட்டீஸ பார்க்கலாம். வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்குறதுக்காக நைட்டு 8 மணிக்கும் பெண்கள் வரிசையா நிப்பாங்க. பசங்க வெடியோட இருப்பாங்க. எந்த கட்சின்னே தெரியாம, சின்ன பிள்ளைங்க கொடிய புடிச்சிட்டு, வேட்பாளர் பின்னாடியே போவாங்க. வேட்பாளர் வர்ற ஜீப்ப தொடுறதுல போட்டி இருக்கும். இப்போது பணிக்காக வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் இதை உணர்வது கடினமே.
News April 11, 2026
கர்ப்பமா இருக்கீங்களா.. இதெல்லாம் செய்யாதீங்க!

கர்ப்ப காலத்தில் தாயின் சீரற்ற உணவு முறை சிசுவின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சரியாக வேகாத முட்டை, இறைச்சி, கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவற்றில் இருக்கும் பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் சிசுவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், காஃபின் அதிகமுள்ள தேநீர், காஃபி மற்றும் கோலா பானங்களை குடித்தால் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம். SHARE IT
News April 11, 2026
ரிலீசுக்கு முன்பே லீக்கான திரைப்படங்கள்

விஜய்யின் ஜன நாயகன் படத்தை போல ரிலீசுக்கு முன்பே பல படங்கள் இணையத்தில் லீக்காகி இருக்கின்றன. சரத்குமாரின் ‘ஜக்குபாய்’ படம் திருட்டு VCD-களில் விற்கப்பட்டதால் வசூல் பாதிக்கப்பட்டது. பவன் கல்யாணின் Atharintinki Daredi, நிவின் பாலியின் ‘பிரேமம்’ படங்கள் இணையத்தில் கசிந்தாலும் ரசிகர்களால் வெற்றிப் படங்கள் ஆக்கப்பட்டன. எனவே, ஜனநாயகனும் அம்மாதிரியான வெற்றியை பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.


