News December 15, 2024
திராவிடர் கழகம் சார்பில் எம்.எல்.ஏ.வுக்கு அஞ்சலி

மறைந்த சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு கோபிசெட்டிபாளையம் திராவிடா் கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சென்னியப்பன் சென்று செலுத்தினார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உடன் இருந்தார்
Similar News
News March 9, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 9, 2026
கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலை திறப்பு

கொடுமுடியில் அமைந்துள்ள மறைந்த பழம் பெறும் நடிகையும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான பத்ம ஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
News March 8, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098


