News January 2, 2026
திராவிடம் தமிழனுக்கு எதிரானது அல்ல: திருமா

இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தல், சமத்துவத்திற்கும் சனாதனத்திற்கும் இடையிலானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் வைகோ நடைபயண தொடக்க விழாவில் பேசிய அவர், சனாதனத்தை வீழ்த்த CM மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை; அது தமிழ் மொழியை காக்கக் கூடியது என்றும் முழங்கியுள்ளார்.
Similar News
News January 25, 2026
ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்: அதிமுக

விஜய்யின் விமர்சனத்திற்கு ‘பனையூர் பண்ணையார்’ என தலைப்பிட்டு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. சட்டவிரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என அதிமுக சாடியுள்ளது. மேலும், அன்றைய CM (ஜெ.,) வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி விஜய் காத்திருந்ததாகவும், கரூரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் (விஜய்) ஒரு காரணம்தானே எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
News January 25, 2026
பிரபலம் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்

பத்ம பூஷண் விருது வென்ற மூத்த பத்திரிகையாளர் <<18955198>>மார்க் டல்லி<<>> மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை துறையின் முக்கிய குரலாக ஒலித்த டல்லி மறைவால் வருத்தமுற்று இருப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அவர் கொண்டிருந்த பிணைப்பு, அவரது படைப்புகளில் பிரதிபலித்ததாக குறிப்பிட்ட மோடி, டல்லியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

விடுமுறை நாளான இன்று, மக்களை வெளியே வரவிடாமல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, காஞ்சி, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள். பாதுகாப்பாக இருங்கள்!


