News August 17, 2024
தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News February 1, 2026
புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News February 1, 2026
புதுவை: இங்கெல்லாம் நாளை மின்தடை!

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் மின்பாதையில் நாளை (பிப்.02) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, வினாயகம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
புதுச்சேரி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


