News May 10, 2024

தியாகராய நகர்: அன்னதானம் வழங்கும் நடிகை நமீதா

image

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இவர் 2019ம் ஆண்டு வெளியான ‘பொட்டு’ படத்துக்குப் பிறகு திரையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில் இன்று(மே 10) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நமீதா, தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு மேல் கோயில் அருகில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவுள்ளார்.

Similar News

News February 16, 2026

JUST IN: சென்னையில் இன்று இது இயங்காது!

image

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மாநகர பேருந்துகளில் தற்காலிகமாக ETMS மூலம் டிக்கெட் வழங்கப்படாது என சென்னை MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி UPI PAYMENTS, NCMC CARDS, DEBIT/CREDIT CARD, CHENNAI ONE உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்த முடியாது. பிரச்னை சரிசெய்யப்படும் வரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. *பயனுள்ளதாக இருக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

News February 16, 2026

சென்னை: அலறிய நர்ஸ்கள்.. சிக்கிய ஆபாச இளைஞர்

image

சென்னை கொளத்தூரில் செவிலியர்கள் தங்கி இருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்தது தெரியவந்தது.

News February 16, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!