News August 12, 2024

திம்பத்தில் 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

image

கர்நாடக மாநிலம் மைசூர்லிருந்து இன்று காலை சத்தியமங்கலம் நோக்கி சென்ற லாரி திம்பம் மலைப்பாதை 17 வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தி கவிழ்ந்தது . ஆனால் லாரி மரத்தில் சிக்கியபடி நின்றுள்ளது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் லாரியின் அடியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். இதில் ஓட்டுநர் சிறுகாயத்துடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 11, 2026

ஈரோட்டில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

ஈரோட்டின் பழமையான பாலத்தை இடிக்க தடை!

image

ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டுவதற்காக தொட்டி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புராதன சின்னமான நீர்வழி பாலத்தை இடிக்கக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

News March 11, 2026

அறிவித்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம்! GOOD NEWS

image

தமிழ்நாடு அரசு உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத்தை ₹50,000-ஆக உயர்த்தியுள்ளது; இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் தகுதியுள்ள உலமாக்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மார்ச் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்கும் முன்பே விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பகிருங்கள் யாருக்காவது பயன்படும்

error: Content is protected !!