News December 29, 2025
திமுக Vs தவெகவுக்கு இதில் தான் போட்டி: அண்ணாமலை

கிறிஸ்துமஸ் விழாக்களில் CM ஸ்டாலின் கலந்துகொண்டதை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு திமுக முதலில் செல்வதா, தவெக முதலில் செல்வதா என்பதில் தான் போட்டி இருந்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் PM மோடி தேவாலயம் சென்றதை சுட்டிக்காட்டிய அவர், ஆனால் பாஜகவை இவர்கள் மதவாத கட்சி என்கின்றனர் எனவும் சாடினார்.
Similar News
News December 31, 2025
தமிழகத்தை உ.பி.,யுடன் ஒப்பிடுவது தவறு: காங்., MP

UP-ஐ விட அதிக கடனில் தமிழகம் உள்ளதாக காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். UP-ஐ தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள சுகாதார, சமூக, கல்வி, பொருளாதார, முதலீடு குறியீடுகளை உபி.,யுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அவர் கூறினார். தமிழகம் போட்டி போட வேண்டியது மகாராஷ்டிராவுடன் மட்டுமே என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 31, மார்கழி 16 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 31, 2025
கூச்சமின்றி பொய் பேசுகிறார் அமைச்சர்: அண்ணாமலை

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக அண்ணாமலை சாடியுள்ளார். TN-ஐ போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக <<18711448>>அமைச்சர் மா.சு.,<<>> கூறிய நிலையில் திருத்தணி சம்பவம், ஆவடியில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட செய்திகளை, X-ல் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கொஞ்சம் கூட கூச்சமின்றி பேசும் மா.சு., கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


