News January 27, 2026

திமுக MLA மீது நடவடிக்கை எடுங்க CM ஸ்டாலின்: காங்கிரஸ்

image

பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் என <<18969847>>திமுக MLA தளபதி<<>> பேசியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தளபதியின் பேச்சு தேவையற்றது எனவும் அவர் சாடியுள்ளார். மேலும் பொது மேடையில் காங்கிரஸ் மற்றும் அதன் MP-க்களை இழிவாகப் பேசிய அவர் மீது CM ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News February 16, 2026

மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்க ராமதாஸ் திட்டம்!

image

அன்புமணி களமிறக்கும் வேட்பாளர்களை எதிர்த்து தனது வேட்பாளர்களை களமிறக்க ஏற்கெனவே ராமதாஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் சௌமியா அன்புமணி தருமபுரி (அ) பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், போட்டியிடும் தொகுதியை சௌமியா அறிவித்த பிறகு அதே தொகுதியில் தனது மகளான ஸ்ரீகாந்தியை களமிறக்க ராமதாஸ் ஆலோசனை நடந்தி வருவதாக கூறப்படுகிறது.

News February 16, 2026

FLASH: வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹15,000 குறைந்தது

image

கடந்த 5 நாள்களாக மாற்றமின்றி தொடர்ந்த வெள்ளியின் விலை, இன்று ஒரே அடியாக கிலோவுக்கு ₹15,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹265-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹2,65,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால், வெள்ளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!