News March 28, 2024
திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு திண்டல் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 18, 2025
ஈரோடு: IMPORTANT வாடகை வீட்டு வாசியா நீங்க!

ஈரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News October 18, 2025
இலவச மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி

சித்தோடு அடுத்த வாசவி கல்லூரி அருகில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி அக்டோபர் 27 முதல் நவம்பர் 29 வரை வழங்கப்பட உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 8778323213, 7200650604 ஆகிய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
News October 18, 2025
ஈரோடு மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!