News March 29, 2024
திமுக வேட்பாளர் பெயரில் 5 பேர் போட்டி

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதில் ஒரு உத்தி தான் வாக்காளர்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்க ஒரே பெயரில் பலரை களம் இறக்குவது. அதன்படி கோவை திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை குறி வைக்கும் விதமாக, 5 பேர் ராஜ்குமார் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்து களமிறங்கி உள்ளனர். இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 9, 2025
கோவை: வங்கி வேலை உடனே விண்ணப்பியுங்க.

கோவை: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 9, 2025
கோவை: இனி வீட்டில் இருந்தே பத்திரவு!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள காந்திரபுரம் சார்பதிவாளர் அலுலகத்தில், வீட்டில் இருந்தபடியே ஆன்லையில் பதிவு செய்யும் ஸ்டார் 3.0 திட்டம் முதல் கட்டமாக நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் இதை செயல்படுத்த ரூ.325 கோடியில் பணிகள் நடக்கிறது. சரியான ஆவணம், பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டிய ரசீது உள்ளிட்டவை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். பின் எளிதாக பத்திரப்பதிவு முடிந்து விடும்.
News September 9, 2025
கோவை மாவட்டத்தை அதிர வைத்த முற்றுகை போராட்டம்!

கோவை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமார் க.கிரியப்பனவா் தலைமையில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.