News June 4, 2024
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தபால் ஓட்டு மற்றும் 32வது சுற்று இறுதி நிலவரம்
டி.ஆர்.பாலு (திமுக) – 755671 + 2940 = 758611
பிரேம் குமார் (அதிமுக) – 270549 + 1033 = 271582
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 209295 + 927 = 210222
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) – 139899 + 302 = 140201 அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 487029 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
Similar News
News September 27, 2025
செங்கல்பட்டு: பண்டைய பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் பாலாற்றில், செய்யாறு கல்லூரி வரலாற்றுத் துறை விரிவுரையாளர் மதுரை வீரன், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பண்டைய கால பீரங்கி குண்டுகள், கல் குண்டு, கைத்துப்பாக்கி ஈய குண்டு, போர் வீரரின் ஆடை பொத்தான் ஆகியவற்றை அவர் கண்டெடுத்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள் அப்பகுதியின் வரலாற்றை அறிய உதவுகின்றன. இந்த தகவலை பிறரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 27, 2025
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
News September 26, 2025
சிட்லபாக்கம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவ்வப்போது ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.