News February 22, 2026
திமுக மீது வெறியில் இருக்கும் மக்கள்: இபிஎஸ்

திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்ட EPS, திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பிய அவர், வாக்குறுதியை நிறைவேற்றாத DMK மீது மக்கள் வெறியில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் உடையும் அளவிற்கு மக்கள் ADMK-வுக்கு வாக்களிப்பார்கள் எனவும் கூறினார்.
Similar News
News March 1, 2026
தென் மாவட்டங்களில் விசிக போட்டியா?

திமுக அளிக்கும் 6 தொகுதிகளை விசிக ஏற்கும் மனநிலையில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 8 + 1 ராஜ்யசபா சீட் கேட்கும் திட்டத்தில் விசிக உள்ளதாம். நாளை நடைபெறும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இதுகுறித்து திருமாவளவன் முறையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தென் மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தாலும் போட்டியிடுவோம் என்று திருமா கூறியிருந்தார். உங்கள் கருத்து என்ன?
News March 1, 2026
என்ன காப்பாத்துங்க PM மோடி: கதறும் தமிழ் நடிகை!

<<19265504>>துபாய் <<>>நகரை ஈரான் தாக்கியுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள தன்னை காப்பாற்றும்படி நடிகை சோனல் சவுஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார். PM மோடிக்கு X தளம் மூலம் அவர் வைத்துள்ள கோரிக்கையில், விமானங்கள் ரத்தாகியுள்ளதால் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கிறேன். தாய்நாட்டிற்கு திரும்ப அரசின் வழிகாட்டுதலை நாடுகிறேன் என பதிவிட்டுள்ளார். சோனல் சவுஹான் தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திலும் நடித்துள்ளார்.
News March 1, 2026
BREAKING: கொமேனி உயிரிழந்தார்

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் அரசுத் தலைவர் அதுல்லா அலி கொமேனி தியாகியானார் (உயிரிழப்பு) என்று ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கொமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தையும் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


