News July 26, 2024
திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). திமுக கிளை செயலாளரான இவரது வீட்டின் பால்கனியில் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரவிக்குமார் (39), சிவனேசன் (22), அஜய்குமார் ஆகிய 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News March 3, 2026
தஞ்சாவூர்: தவெக கூட்டத்திற்கு அனுமதி

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நாளை (மார்ச் 4) தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக போலீசாரிடம் கட்சியினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறும் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
தஞ்சை: பாலியல் வழக்கில் தலைமறைவானவர் கைது!

பாப்பாநாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றம் சுமத்தப்பட்ட கவிதாசன் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கவிதாசனை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 3, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்.02) இரவு 10 முதல் இன்று (மார்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


