News March 20, 2025
திமுக பிரமுகர் சடலம் மீட்பு

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார்(71) காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக கொலை செய்து, செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் கிராமத்தில் புதைத்ததாக தாம்பரம் போலீசாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், இன்று(மார்ச்.21)செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 21, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 2.34 லட்சம் விவசாயிகள் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை 2,34,881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து பயனடைந்துள்ளனர். இதில் விழுப்புரம்-27693, திண்டிவனம்-17785, செஞ்சி-47663, அரகண்டநல்லூர்-70571, அவலூர்பேட்டை-37659, விக்கிரவாண்டி-33268, மரக்காணம்-45, வளத்தி-207 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
News March 21, 2025
சிறுமி பாலியல் வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு தண்டனை

தி.வெ.நல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 22,000 அபராதம் வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.
News March 20, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.