News March 25, 2024
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், ராம.கருமாணிக்கம் உடனிருந்தனர்.
Similar News
News September 25, 2025
பரமக்குடியில் வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணித்தும்
மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News September 25, 2025
ராம்நாடு: 600 மது பாட்டில்கள் திருட்டு., 5 பேர் கைது

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு டாஸ்மாக் கடையில் செப். 20ல் அதிகாலை பூட்டை உடைத்து 600 மது பாட்டில்கள் திருடுபோயின. ராமநாதபுரம் எஸ்பி அறிவுறுத்தல்படி, எஸ்ஐ சிவசாமி தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடினர். தீவிர தேடுதலுக்கு பின் சித்தார்கோட்டை அசோக் குமார், ராமநாதபுரம் தங்கபாண்டி, புதூர் நிஷாந்த், விருதுநகர் கே.ஆலங்குளம் முனியரசு, முத்துப்பேட்டை மோகன்ராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்
News September 25, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை., கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, 2025–2026 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர கல்வி வெளிநாடு சென்று படிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.