News February 12, 2026

திமுக கூட்டணி வெலவெலத்துப் போயிருக்கிறது: தமிழிசை

image

NDA கூட்டணி பலமாக இருக்கிறது. எதிர் கூட்டணிதான் வெலவெலத்துப் போயிருக்கிறது என தமிழிசை கூறியுள்ளார். முடியாது என்று எதிரணியினர் சொன்னபோதும் வெற்றிகரமாக கூட்டணியை அமைத்ததாக கூறிய அவர், அதேபோல, பாஜகவால் வெல்லவும் முடியும், ஆட்சி அமைக்கவும் முடியும் என்பதை நடத்திக் காண்பிப்போம் என்றார். மேலும், இம்முறை மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் பாஜக ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2026

NDA கூட்டணியை உறுதி செய்த புதுச்சேரி CM

image

இதுவரை NDA கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்த புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, தற்போது கூட்டணி முடிவை அறிவித்துள்ளார். காரைக்கால் வந்த அமித்ஷாவை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்த பிறகு பேசிய அவர்,
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் NDA கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

News February 14, 2026

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹2,000.. REQUEST

image

பொங்கல் பரிசு வழங்கப்பட்ட 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கும் <<19125836>>கோடைக்கால சிறப்பு தொகுப்பான<<>> ₹2,000-ஐ வழங்குமாறு பலரும் TN அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி குடும்பங்களுக்கு மட்டும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். முன்னதாக இந்தாண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா என அதிமுக, தவெக சாடியிருந்தது கவனிக்கத்தக்கது.

News February 14, 2026

சர்ச்சை பேச்சு.. அமைச்சருக்கு திமுக தலைமை செக்!

image

திமுக தலைமை அழைப்பின் பேரில் நெல்லை பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி, திமுக 170 தொகுதிகளில் போட்டி மற்றும் தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேவையற்ற பேச்சுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்திட அவரை திமுக தலைமை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!