News March 1, 2026
திமுக கூட்டணி.. ஒரே நாளில் மாறியது

மனிதநேய மக்கள் கட்சி, SDPI, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என திமுக தலைமை கருதுகிறதாம். அதேநேரம், 2021 தேர்தலைப் போன்றே மதிமுக, தவாக, கொமதேக கட்சிகளை உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியுள்ளதாம்.
Similar News
News March 1, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,800 உயர்ந்தது

விடுமுறை நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹225 உயர்ந்து ₹15,775-க்கும், 1 சவரன் ₹1,800 அதிகரித்து ₹1,26,200-க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹5,200 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் ₹1,800 அதிகரித்துள்ளது. போர் பதற்றம் நிலவுவதால் வரும் நாள்களில் மேலும் விலை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 1, 2026
650 காலியிடங்கள், ரிசர்வ் வங்கியில் பணி..APPLY NOW

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு (650 காலியிடங்கள்) தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. இப்பணிக்கான தேர்வு, நாடு தழுவிய அளவில் இரண்டு கட்டமாக (ஆன்லைன் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு) நடைபெறும். விண்ணபிக்க மற்றும் தேர்வு கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த மார்ச் 8-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு <
News March 1, 2026
துபாய் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

செல்வம், தொழிற் வளர்ச்சி டெக்னாலஜி, சுற்றுலா என அனைத்திலும் செழிப்பாக இருக்கும் நகரம் தான் துபாய். அங்கு இல்லாத உலகின் டாப் கம்பெனிகளே இல்லை. அத்துடன் அங்கு வசிக்கும் 40 லட்சம் பேரில் 92% பேர் வெளிநாட்டினர். எனவே துபாயை தாக்கினால், அங்கு வசிக்கும் தனது மக்களை காக்க உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து போரை நிற்க வாய்ப்பிருப்பதாக நினைத்து ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.


