News March 22, 2026
திமுக கூட்டணி உடைந்தது.. அடுத்தடுத்து பரபரப்பு

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த வேல்முருகன், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். திமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறி அவர் குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பழைய வழக்கை தூசி தட்டி எடுத்து தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 12, 2026
ஸ்டாலின் டெல்டாக்காரர் அல்ல.. உல்டாகாரர்: EPS

மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்ட சமயத்தில் கூட CM ஸ்டாலின் நேரடியாக வந்து பார்க்கவில்லை என EPS விமர்சித்தார். தஞ்சையில் TTV தினகரனுடன் இணைந்து பிரசாரம் செய்த அவர், விவசாயிகள் அவதிப்படும்போது எங்கே போனார் டெல்டாக்காரர் என கேள்வி எழுப்பிய அவர் ஸ்டாலின் டெல்டாக்காரர் அல்ல, உல்டாகாரர் என சாடினார். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து CM ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.
News April 12, 2026
ஈரானுக்கு சீனா ரகசியமாக ஆயுதம் வழங்குகிறதா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை 3-வது கட்டமாக பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப சீனா ரகசியமாக ஏற்பாடு செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதை முற்றிலுமாக மறுத்துள்ள சீனா, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை US நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.