News January 9, 2026
திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

மாணிக்கம் தாகூர் X தள பதிவு, திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக MLA-களின் பட்டியலை வெளியிட்டு, அரசவை கவிஞர்களும், ஐடி விங் மகான்களுக்கும் நல்ல பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, கூட்டணி இல்லாமல், திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 10, 2026
அமித்ஷாவுக்கு என்ன கொழுப்பு: வைகோ

திராவிட இயக்கம் தனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்திருப்பதாக வைகோ பேசியுள்ளார். திராவிட இயக்க கோட்டையை அடியோடு ஒழித்து விடுவோம், துடைத்து எறிவோம் என பேசும் அமித்ஷாவுக்கு என்ன கொழுப்பு, ஆணவம் என்ற அவர், மோடி பிரதமராக இருக்கும் தைரியத்தில் இப்படி பேசுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு கூட்டம் மத வெறியோடு உள்ளது எனவும் அவர்களை அகற்றவேண்டும் என்றும் கூறி பாஜகவை சாடியுள்ளார்.
News January 10, 2026
காங்கிரஸின் 3வது பிளான்.. கார்த்தி சிதம்பரம் Open Talk

தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கிறது என்ற சிந்தனை இருக்கத்தானே செய்யும் என்றார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக 3வது செயல்திட்டம், அதிகார ஆசை, விரிவாக்கப்பட்ட சிந்தனை இருக்கக்கூடாதா என கேட்ட அவர், அதுபோன்ற சிந்தனைகள் இருந்தால்தான் நல்லது என கூறி உண்மையை உடைத்தார்.
News January 10, 2026
ஜன நாயகனில் சர்ச்சைக்குரிய காட்சிகள்: H.ராஜா

ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு சிக்கல் ஏற்பட படக்குழுக்களே காரணம் என H.ராஜா கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிப் பதிவுகள் இருப்பதாலேயே தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் உள்ளதாகவும், இதில் மத்திய அரசை குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், TN-ஐ பொறுத்தவரை ஆளுங்கட்சி நடத்தும் நிறுவனங்களின் தயவு இன்றி எந்த படத்தையும் வெளியிட முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.


