News January 25, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ்?

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரேமலதாவும், ராமதாஸும் இதுவரை கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் உள்ளனர். இந்நிலையில், தேமுதிகவுக்கு 6 சீட், ராமதாஸ் பாமகவுக்கு 3 சீட் என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறைவான சீட்கள் என்றாலும் தேர்தலுக்காக சகலமும் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் பிரேமலதாவும், ராமதாஸும் கூட்டணிக்கு ஓகே சொல்ல தயாராகிவிட்டார்களாம்.
Similar News
News February 1, 2026
Budget: வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசின் முயற்சி

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் (PROI) இந்திய நிறுவனங்களின் பங்குகளில் போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம் மூலம் நேரடியாக முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச அளவு 5% இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம், நிறுவனங்களுக்கு புதிய மூலதனம் கிடைக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
News February 1, 2026
இந்தியாவில் 3 இடங்களில் ஆயுர்வேத பயிற்சி மையம்

மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மண்டலங்களில் மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டில் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத பயிற்சி மையம் நிறுவப்படும் எனவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 1, 2026
பட்ஜெட்டில் TN-க்கு கிடைக்கும் அங்கீகாரம்

தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாசார மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டமும், பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழல் வளத்தையும் உலக மக்கள் அறிவர் என கூறுகின்றனர்.


