News March 15, 2026

திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

image

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 9, 2026

சென்னையில் திருநங்கை துடிதுடித்து பலி

image

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சாலை தடுப்புகளின் மேல் தொங்கிக்கொண்டிருந்த மின் வயர் உரசியதில், மின்சாரம் பாய்ந்து நேற்று திருநங்கை துடிதுடித்து உயிரிழந்தார். மின் வாரியத்தின் அலட்சியம் குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 9, 2026

தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

image

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் தணிந்ததால் நேற்று தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று பெரிய அளவில் சரிவில் உள்ளது. சர்வதேச சந்தையில் நேற்று 1 அவுன்ஸ்(28g) 4,817 டாலர்களுக்கு விற்பனையான நிலையில், தற்போது 4,713 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் 1 அவுன்ஸ் 77 டாலர்களில் இருந்து 73 டாலர்களாக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்று நம்மூரில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

News April 9, 2026

திமுகவின் தோல்வி கோவையில் தொடங்கும்: அண்ணாமலை

image

திமுகவின் வெற்றி கோவை தெற்கில் இருந்து தொடங்கும் என ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், திமுகவின் தோல்வி கோவை தெற்கில் தொடங்கி சேப்பாக்கம் வரை செல்லும் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இந்த தொகுதியில் மட்டும் 18 சுயேச்சைகள், தொண்டாமுத்தூரில் கரூரைச் சேர்ந்த 3 சுயேச்சைகளை செந்தில் பாலாஜி போட்டியிட வைத்துள்ளதாக கூறினார். இவர்கள் அனைவரும் ஒரே நோட்டரியிடமே கையெழுத்து பெற்றதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!