News January 17, 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகவுள்ளாரா?

திமுக கூட்டணியில் ராமதாஸை இணைக்க திமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக திருமாவை அவர்கள் சமாதானம் செய்து வருகிறார்களாம். ஆனால் இதில் உடன்பாடு இல்லாததால், ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென திருமா, திமுக தலைமையிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுமா என தவெக கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறதாம்.
Similar News
News February 1, 2026
பாஜக அரசில் பொருளாதார ஸ்திரத்தன்மை: FM நிர்மலா

12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து, இந்தியாவின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் திகழ்வதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கலின்போது பேசிய அவர், நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி & மிதமான பணவீக்கம் ஆகியவையும் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களது அரசு எடுத்த முக்கிய தேர்வாக அமைந்துள்ளது என்றார்.
News February 1, 2026
இந்த பட்ஜெட்டில் இதற்குதான் முக்கியத்துவம்

மத்திய பட்ஜெட் மூலம் 3 முக்கிய கடமைகளை மத்திய அரசு செய்யவுள்ளதாக FM நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். 1. வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம். 2.பட்டியலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள், பெண்கள், இளைஞர்களை உயர்த்தும் பட்ஜெட். 3. AI, டெக்னாலஜி துறைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பட்ஜெட்டாக இது அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
இவர்களே பட்ஜெட்டின் எழுத்தாளர்கள்!

மேலே உள்ள போட்டோவில் இருப்பவர்கள்தான் மத்திய பட்ஜெட்டை வரையறுத்தவர்கள். (இடதில் இருந்து வலமாக) பொருளாதார விவகாரங்கள் செயலாளர் அனுராதா தாகூர், வருவாய்த்துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினச் செயலர் வும்லுன்மாங் வுவல்னம், நிதிச் சேவைகள் செயலாளர் நாகராஜு, முதலீட்டுத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்களின் செயலர் கே மோசஸ், தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன்.


