News January 7, 2026

திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறாது: சீமான்

image

தவெகவிடம் கூட்டணிக்கு ரகசியமாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் நீண்ட நாள்களாக பரவி வருகிறது. இந்நிலையில் தொகுதி பேரம் நடத்தவே காங்., இதுபோன்ற செய்தியை பரப்பி விடுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து அவர்கள் வெளியே வரமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருப்பது கஷ்டமாக இருந்தால் காங்., தனித்து போட்டியிடலாமே எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News January 27, 2026

ராசி பலன்கள் (27.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

இந்தியா வரும் கனடா பிரதமர்

image

கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு வருகைதர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. யுரேனியம், எரிசக்தி, கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலத்தில் இந்தியா – கனடா இடையே உறவு மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

ஹிந்தியால் பல தாய்மொழிகள் அழிந்துவிட்டது: உதயநிதி

image

மத்திய அரசின் ‘ஹிந்தி திணிப்பை’ தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என உதயநிதி தெரிவித்துள்ளார். மொழி உரிமை என்று வரும்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருப்பதால், மத்திய பாஜக அரசுக்கு கோபம் வருகிறது என சாடிய அவர், ஹிந்தி திணிப்பால் ஹரியானா (ஹரியான்வி), பிஹார் (பிஹாரி), சத்தீஸ்கர் (சத்தீஸ்கரி), உ.பி.,யில் (போஜ்புரி) தாய்மொழிகள் அழிந்துவிட்டதாக தெரிவித்தார்.

error: Content is protected !!