News January 29, 2026

திமுக கூட்டணிக்கு அடிபோடும் ராமதாஸ்?

image

தவெகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிய ராமதாஸ் தரப்பு, திமுகவுடனான கூட்டணிப் பேச்சை மறுக்கவில்லை. முன்னதாக, கூட்டணி பற்றி திமுக எடுக்கும் முடிவில் விசிக தலையிடாது என திருமா கூறியிருந்தார். இந்நிலையில், திருமாவுடன் தங்களுக்கு எந்தச் சண்டையும் இல்லை என்றும், விரைவில் வெற்றிக்கூட்டணி அமையும் எனவும் அருள் MLA பேசியுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெறவே அவர் இவ்வாறு பேசுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 19, 2026

ஸ்டாலினுடன் மேடையேறும் ராகுல் காந்தி?

image

வரும் 8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பிரசார மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேடையில் CM ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி கட்சிகளுடன் 22-ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாள்களுக்குள் அதை இறுதி செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News February 19, 2026

933 பணியிடங்கள், டிகிரி போதும்.. ₹56,100 சம்பளம்!

image

UPSC-ல் IAS, IPS, ரயில்வே, தபால் துறைகளின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 21- 32 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤தேர்ச்சி முறை: Preliminary and Main Examination & Personality Test *சம்பளம்: ₹56,100- ₹1,32,000 வரை ➤வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் ➤வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

image

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!