News March 3, 2026

திமுக – காங்., கூட்டணி.. இதுவே கடைசி முயற்சி

image

திமுக – காங்., இடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்., நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், கார்கே வேண்டுகோளை ஏற்று, குழப்பத்தை சரி செய்ய கடைசி முயற்சியாக செல்வப்பெருந்தகை சிதம்பரம் ஆகியோர் ஸ்டாலினை சற்றுநேரத்தில் சந்திக்கவிருக்கிறார். ஒருவேளை, கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஸ்டாலினும் ஆலோசிக்கவிருக்கிறார்.

Similar News

News April 13, 2026

வருமான வரி வழக்கு.. விஜய் மேல்முறையீடு

image

புலி படத்திற்கு பெற்ற ₹15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி 2022 ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை ₹1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்கை, தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

News April 13, 2026

BREAKING: அமைச்சர் சேகர் பாபு வீட்டில் சோதனை

image

அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமான இடங்களில் IT அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 13, 2026

₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

image

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 (மாதத்திற்கு ₹1515) கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!