News March 10, 2026

திமுக கலக்கத்தில் உள்ளது: PM மோடி

image

NDA-வுக்கு TN மக்களிடம் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுக கலக்கத்தில் உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாளை திருச்சியில் நடக்கும் NDA மாநாட்டில் பங்கேற்பது பற்றி X-ல் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவின் மோசமான நிர்வாகம், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே NDA-வின் வளர்ச்சி கொள்கையுடன் மக்கள் தங்களை இணைத்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 29, 2026

உப்பள தொழிலாளர்களுக்கு ₹8,000.. திமுக வாக்குறுதி

image

திமுக தேர்தல் அறிக்கையில் நிதி சார்ந்த பல வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டார். *உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ₹5,000-ல் இருந்து ₹8,000 ஆக உயர்த்தப்படும். *தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம் ₹2,000 ஆக உயர்த்தப்படும். *புதிய ஆட்டோ ரிக்‌ஷா வாங்குவதற்கு ₹1.5 லட்சம் மானியம். *உடலுழைப்பு தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உயர்கல்வி உதவித்தொகை ₹4,000 ஆக அதிகரிக்கப்படும்.

News March 29, 2026

விபத்தில் பிரபல நடிகர் காலமானார்

image

கடலில் தவறி விழுந்த பெங்காலி நடிகர் ராகுல் அருணோதய் பானர்ஜி (42) மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தல்சாரி பீச்சில் நடந்த ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட படகு விபத்தில் அவர் கடலில் தவறி விழுந்தார். ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. ‘சிரோதினி துமி ஜே அமர்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. RIP

News March 29, 2026

வெள்ளி பொருள்கள் பளபளக்க… ஈஸி டிப்ஸ்!

image

வெள்ளி நகைகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் போன்றவை காலப்போக்கில் கருத்துவிடும். வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே அவற்றை உங்களால் மீண்டும் பளபளக்க செய்ய முடியும். *பேக்கிங் சோடா & தண்ணீரை சேர்த்து பேஸ்ட்டாக்கி, பிரஷ் கொண்டு தேய்த்து பளபளப்பாக்கலாம். *வெந்நீரில் டிடெர்ஜெண்ட் பவுடரை சேர்த்து, அதில் வெள்ளி பொருள்களை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் மெதுவாக தேய்த்தாலும், அவை மீண்டும் புதுப்பொலிவு பெறும்.

error: Content is protected !!