News March 20, 2026
திமுக ஒரு மனிதகுல விரோதி: சீமான்

தன் முதுகிலேயே ஸ்டாலின் ஒரு டெல்லியை (காங்.,) வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என சீமான் சாடியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், GST, NEET உள்ளிட்ட காங்., பிரசவித்த பிரச்னைகளுக்கு மோடி பூஸ்ட் கொடுத்து வளர்க்கிறார் என்று விமர்சித்துள்ளார். எனவே பாஜகவை விமர்சிப்பதற்காக காங்.,ஐ திமுக புனிதப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், காங்., தமிழின விரோதி என்றால் திமுக மனிதகுல விரோதி என குறிப்பிட்டார்.
Similar News
News April 8, 2026
நேரடி பேச்சுவார்த்தை: USA, ஈரானுக்கு பாக்., அழைப்பு

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதற்காக USA, ஈரான் நாடுகளுக்கு பாக்., PM ஷெபாஸ் ஷெரிஃப் நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து உறுதியான உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்காக இருநாட்டு தூதர்களையும் ஏப்.10 அன்று பாக்.,க்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நேரடி பேச்சுவார்த்தை மூலம் நீடித்த அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,720 உயர்ந்தது

தங்கம் விலை இன்று (ஏப்.8) சவரனுக்கு ₹2,720 உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 1 கிராம் ₹340 உயர்ந்து ₹14,200 -க்கும், சவரன் ₹2,720 அதிகரித்து ₹1,13,600 -க்கும் விற்பனையாகிறது. ஈரான் – USA போர் நிறுத்த அறிவிப்பால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 8, 2026
ஓடிப்போன மாப்பிள்ளையுடன் அஜித்தை ஒப்பிட்ட விக்கி

அஜித்துடனான படம் டிராப் ஆனது குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். ஒரு பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தாலி கட்டுவதற்கு முன் மாப்பிள்ளை சென்றுவிட்டால், அந்த பெண்ணுக்கு திருமணம் நடப்பது எவ்வளவு கஷ்டமோ, அதுபோலதான் ஒரு படம் டிராப் ஆன பிறகு ஒரு தயாரிப்பாளர்/ நடிகரை நம்ப வைப்பது கஷ்டம் என்றார். என்னை ஒரு மொக்க பீஸாக பிறர் பார்ப்பதை தன்னால் உணர முடிந்ததாகவும் தெரிவித்தார்.


