News December 28, 2024
திமுக எம்எல்ஏ பேனர்களை அகற்றக்கோரி வழக்கு – ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த குருமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு நகராட்சிப் பகுதியில் பொது சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் முன் அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது என்று மனு செய்திருந்தார். வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
மதுரையில் அரிவாள் வெட்டு; சிறுவன் கைது

மதுரையை சேர்ந்த முனியாண்டி (52) வீட்டின் அருகே 17 வயது சிறுவன் குடிபோதையில் ரகளை செய்தார். இதை அவர் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த சிறுவன் அரிவாளை எடுத்து வந்து முனியாண்டியை சரமாரியாக வெட்டினார். முனியாண்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
News March 8, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (07.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.