News December 14, 2025
திமுக இளைஞர்கள் கட்டுப்பாடு உடையவர்கள்: உதயநிதி

திமுகவை தோற்கடித்து விடலாம் என்று பலர் போடும் கணக்கை இளைஞர் அணி சுக்குநூறாக உடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் இளைஞர் அணியினர் கட்டுப்பாடு உள்ளவர்கள் என்ற அவர், கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தால் எதுவும் செய்ய முடியாது என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். எதிரிகள் மட்டுமே மாறி மாறி வருகின்றனர், ஆனால் திமுக அதே இடத்தில் தான் இருக்கிறது என்றும் உதயநிதி தெரிவித்தார்.
Similar News
News December 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 25, மார்கழி 10 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News December 25, 2025
9 பேர் பலி: CM ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ₹3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ₹1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News December 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


