News March 21, 2024
திமுக ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாங்குநேரியில் மார்ச்-25-ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வது குறித்து இன்று மாலை நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
Similar News
News October 25, 2025
குமரி : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

குமரி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
குமரியில் காலை 8 மணிக்கு இங்கெல்லாம் கரண்ட் கட்!

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (அக். 25) நடைபெற உள்ளது. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவே உங்க பணிகளை வேகமாக 8 மணிக்குள்ள முடிங்க…SHARE!
News October 24, 2025
குமரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது எப்படி?

நாகர்கோவில் ஆயுதப்படை சாலையில் அருள்ஜீவன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து குட்கா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ. ஜெஸி மேனகா கேரளா சென்று குடோனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, 2 கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


