News January 5, 2026

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு மொத்தம் ₹5000

image

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மொத்தம் (5 ஆண்டுகளில்) பொங்கல் பரிசாக ₹5000-ஐ முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆம்! 2022-ல் பொங்கல் தொகுப்பு (பணம் இல்லை), 2023 மற்றும் 2024-ல் பொங்கல் தொகுப்புடன் தலா ₹1000 வழங்கப்பட்ட நிலையில், 2025-ல் பொங்கல் தொகுப்பு (பணம் இல்லை) மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது 2026-ல் பொங்கல் தொகுப்புடன் ₹3000 என மொத்தம் ₹5000 அறிவிக்கப்பட்டுள்ளது..

Similar News

News January 22, 2026

BREAKING: சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்தார்

image

‘G-RAM-G’ திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்பு தொடர்பாக பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பினார். அதற்கு ‘இண்டியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் அதனை கூறியதாக CM கூறினார்.

News January 22, 2026

சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது ஏன்? EPS விளக்கம்

image

பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக EPS தெரிவித்துள்ளார். மேலும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை தொழிலில் மூலப்பொருள்கள் விலை உயர்வால் வளர்ப்பு கூலியை ₹6.50-லிருந்து ₹20-ஆக உயர்த்த கோரியும் அரசு ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News January 22, 2026

ஜெ., போல விஜய்யும் ஜெயிப்பார்: செங்கோட்டையன்

image

திமுகவும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. ஆனால், தவெகவோ செயல்படாமல் முடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 2011 தேர்தலின்போது மூன்றே இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வெற்றி பெற்ற ஜெ.,வை போல விஜய்யும் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV – OPS ஆதரவாளர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!