News February 12, 2025

திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குன்றத்தூர் – மாங்காடு சாலையில் உள்ள கார்த்திக் பேலஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் த.துரைசாமி தலைமையில் நடக்கிறது. இல்கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள கலந்து கொள்வர்.

Similar News

News February 12, 2025

82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை

image

காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான, ‘காஞ்சி யூத் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று (பிப்.11) காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த இளையனார்வேலு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஹேமேஷ் குமார் (16), காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

News February 12, 2025

டிப்ளமோ முடித்தவர்களுக்கு HP நிறுவனத்தில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <>விண்ணப்பிக்கலாம்<<>>. ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

கடையில் தீப்பிடித்து பொருள்கள் நாசம்

image

மதுரையைச் சேர்ந்த செல்வம் (47), ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள மேவளூர்குப்பம் பகுதியில் பெனாயில், லைசால், ஆசிட் உள்ளிட்ட கழிப்பறை உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே, நேற்று திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், கடையின் ஷட்டரை உடைத்து தீயை அணைத்தனர். அதற்குள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

error: Content is protected !!