News January 31, 2026
திமுக அரசை பாராட்டும் பாஜக அரசு: ஸ்டாலின்

TN வளர்ச்சி குறித்து தான் பேசுவதெல்லாம் மத்திய அரசின் அறிக்கையில் வந்த தகவல்கள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உற்பத்தி, வேலைவாய்ப்பில் TN முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை(ADR) கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் அறிக்கையை தமிழக கவர்னரும், PM மோடியும் முதலில் படிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Similar News
News January 31, 2026
என்னென்ன கோல்டு லோன் இருக்கு தெரியுமா?

தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்ற பணத்தை, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கடனாக வழங்குகின்றன. குறைந்த வட்டியில், அவசர நிதி தேவைகளை நிறைவேற்ற கோல்டு லோன் ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. என்னென்ன வகையான கோல்டு லோன்கள் உள்ளன என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவசர காலங்களில் பெரும் உதவியாக இருக்கும் என்பதால் பலரும் தங்கம் மீது ஆர்வம் காட்டுகின்றனர்.
News January 31, 2026
தாமதமாகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. SORRY கேட்ட விஜய்

‘ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து முதல்முறையாக விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும், இதற்காக உண்மையாகவே வருத்தம் (SORRY) தெரிவித்து கொள்வதாகவும் விஜய் கூறியுள்ளார். ஜன நாயகன் தனது கடைசி படம் என்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
News January 31, 2026
விண்வெளியில் AI டேட்டா செண்டர்: SpaceX

விண்வெளியை உலகின் மிகப்பெரிய AI டேட்டா செண்டராக மாற்ற SpaceX தயாராகி வருகிறது. சுமார் ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி, சூரிய சக்தி & லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு, AI & டேட்டா செயலாக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைந்து அதிவேக டேட்டா பரிமாற்றத்தை சாத்தியமாக்கும்.


