News December 26, 2024

திமுக அரசை கண்டித்து நாளை தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

image

பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும்பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (டிச27) தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணியிணர் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 30, 2025

தசரா திருவிழா; சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால், தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் மனு அளித்தார்.

News August 30, 2025

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக தூத்துக்குடி டிஎஸ்பி மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.

News August 29, 2025

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் செப்டம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 2 மணி வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர், மறுநாள் முதல் மீண்டும் தரிசனம் அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர்*

error: Content is protected !!