News January 2, 2025

திமுக, அதிமுகவினர் மாறி மாறி போஸ்டர் 

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வாணியம்பாடி சுற்று புற பகுதியில் இன்று (ஜன.02) காலை முதல் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதிமுக சார்பில் ‘யார் அந்த SIR?’ என்றும், திமுக சார்பில் ‘WE ARE SAFE IN TAMILNADU’ என்றும்  போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

Similar News

News January 4, 2025

2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பட்டு நூற்போர் சேவை சங்கம்

image

ஆலங்காயத்தில் 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பட்டு நூற்போர் சேவை தொழிற் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவை, 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் பட்டு பஞ்சுக்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஆனால், இவை முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் 25 கி.மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

News January 3, 2025

துவரஞ்செடியை காணவில்லை என விவசாயி புகார்

image

திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி, மோகன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் 1 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருந்த துவரஞ்செடியை காணவில்லை என இன்று (03.01.2025) குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து அந்த பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. 

News January 3, 2025

பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்

image

2025 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.