News January 19, 2026

திமுகவை அப்படியே EPS காப்பியடிக்கிறார்: KN நேரு

image

திமுக கஷ்டப்பட்டுத் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையை, EPS நகல் எடுப்பதாக KN நேரு விமர்சித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், திமுக ₹1,000 அறிவித்தபோது, அதை எப்படி கொடுக்க முடியும் எனக் கேட்ட EPS, இப்போது ₹2,000 கொடுப்பேன் என்கிறார். எப்படி கொடுப்பீர்கள் என்றால் திறமையாக ஆட்சி செய்வோம் எனக் கூறுகிறார். ஏற்கெனவே அவர் 10 வருஷம் ஆண்டு தான் TN இப்படி இருக்கு என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Similar News

News February 3, 2026

மாதம் ₹1,500.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள், பெண்கள்) தங்கள் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்ய ஏதுவாக TN அரசு மாதம் ₹1,500 வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த ஓய்வூதியத்தை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், VAO, தாசில்தாரை சந்தித்து விண்ணப்ப படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், <>TNesevai <<>>இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

News February 3, 2026

கூட்டணி அறிவிப்பு; பிரேமலதா முடிவை மாற்றியது ஏன்?

image

பிப்.3-ல் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்த <<19037842>>பிரேமலதா<<>>, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் சீட் விவகாரம் என சொல்லப்படுகிறது. தேமுதிகவை கூட்டணியில் இணைக்க விரும்பினாலும், திமுக(6), அதிமுக(9+1) தொகுதிகள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டார்களாம். இதனால், கூட்டணி அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ள பிரேமலதா, அதிமுகவா, தவெகவா என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறாராம்.

News February 3, 2026

தவறாக தொட்டவனை பளாரென அடித்த நடிகை ரேவதி

image

பள்ளிப் பருவத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை ரேவதி மனம் திறந்துள்ளார். அதில், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை பஸ்ஸில் ஒருவன் தவறாக தொட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்திலேயே அவனை பளாரென அடித்ததாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அம்மா கொடுத்த தைரியத்தாலேயே இப்படி செய்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்.

error: Content is protected !!