News January 1, 2026

திமுகவுக்கு பெரும் நிம்மதி

image

பிரவீன் சக்ரவர்த்தி கிளப்பிய சர்ச்சையால் DMK-CONG கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதினர். காங்., தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், செல்வப்பெருந்தகை கூட்டணி வலுவாக இருப்பதாக சொல்லிவிட்டார். <<18722641>>ப. சிதம்பரமும் <<>>திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், திமுக தலைமை நிம்மதியடைந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News February 6, 2026

திமுக தான் தலைமையா? கொதித்த மாணிக்கம் தாகூர்

image

புதுச்சேரியில் திமுக – காங்., கூட்டணிக்கு தலைமை யார் என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணியில் 8% ஒட்டு வைத்துள்ள திமுக தலைமை தாங்குமா, 26% உள்ள காங்., தலைமை தாங்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் இல்லாமல் நடந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைமை வகிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News February 6, 2026

சற்றுமுன்: தங்கம் விலை மேலும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து இறக்கத்திலேயே நீடிக்கிறது. 1 அவுன்ஸ்(28g) 50 டாலர்கள் வரை குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், நாளையும் தங்கம் விலை கணிசமாக குறையும். சர்வதேச சந்தையில் நிலவும் சூழலால் நம்மூரில் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான தங்கம், இன்று ₹1,12,960-க்கு விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு ₹21,440 குறைந்துள்ளது.

News February 6, 2026

புளுகு மூட்டை திமுக: EPS

image

களத்திற்கு வந்து ஸ்டாலின் ஓட்டு கேட்டால் அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் 0 தான் என EPS கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதியை வழங்கவில்லை என மக்களுக்கு திமுக அல்வா கொடுக்கிறது என்ற அவர், ரயில்வே திட்டங்கள் வரவில்லை என புளுகு மூட்டைகளை அரசு அவிழ்த்து விடுவதாகவும் பேசியுள்ளார். மேலும், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவம், மரியாதையை CM எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!