News February 4, 2026
திமுகவுக்கு ஜனநாயகம் பற்றி பேச தகுதியில்லை: வானதி

சட்டமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்த திமுகவுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என வானதி கேள்வி எழுப்பியுள்ளார். பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசத் துவங்கினாலே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு அனைத்தையும் நீக்குகிறார் என்று விமர்சித்த அவர், வெளிவராத புத்தகத்தில் இருப்பதாக கூறி தேச பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை அவையில் பேச எப்படி அனுமதிப்பது என கேள்வி எழுப்பினார்.
Similar News
News February 5, 2026
Layoff-ல் வேலையை இழந்த சசிதரூர் மகன்!

IT முதல் ஊடகத்துறை வரை, Layoff என்ற பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற ‘The Washington Post’ பத்திரிகை, மொத்தம் 300 பேரை நீக்கியுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் MP சசிதரூரின் மகன் இஷான் தரூரின் பெயரும் உள்ளது. 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தன்னை நீக்கியது குறித்து அவர் பதிவிட, பெயர், அனுபவம் என எதுவும் இன்றைய பணியிட சூழலில் பாதுகாப்பை தராது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News February 5, 2026
அண்ணாமலை கேவலமானவர்: CTR நிர்மல்குமார்

தவெக இன்ஜின் ஓட்டை இன்ஜின் என அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு நிர்மல்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இரட்டைக் கொலை செய்து, தவழ்ந்து ஆட்சியை பிடித்த தற்குறி EPS என அண்ணாமலை பேசியதை நினைவுகூர்ந்த அவர், ஒரே ஆண்டில் EPS-ஐ CM ஆக்குவோம் என அண்ணாமலை மாற்றி பேசுவதாக சுட்டிக்காட்டினார். மேலும், பொது வாழ்வில் இதுபோன்ற கேவலமான நபர்கள் பற்றி பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
News February 5, 2026
NDA கூட்டணியில் ஓபிஎஸ்.. அண்ணாமலை சூசகம்

தவெக (அ) திமுகவில் இணைய, OPS-ஐ அவரது ஆதரவாளர்கள் நெருக்குகிறார்களாம். இதனிடையே, தேர்தல் அரசியலில் இருந்து OPS விலகிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் OPS உள்பட யாரும் தனித்து விடப்படவில்லை, திமுக ஆட்சியை தூக்கி எறிவதற்கு எல்லோரும் ஒரே அணிக்கு வருவார்கள் என தெரிவித்த அண்ணாமலை, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


