News January 25, 2026
திமுகவுக்கு இறுதி தேர்தல்: EPS

4-ல் ஒரு பங்கு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றாததால், அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதாக EPS சாடியுள்ளார். சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது எனவும், வரும் தேர்தல் தான் அவர்களுக்கு கடைசி தேர்தல் என்றும் விமர்சித்தார். மேலும், தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் ஓரிரு நாள்களில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News February 17, 2026
தெறி ரீ-ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் ‘தெறி’ படம் பிப்.27-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே சில புது படங்களின் ரிலீஸால் 2 முறை ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் நிலையில், இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் பெஸ்ட் தியேட்டர் மொமண்ட் எது?
News February 17, 2026
BREAKING: திமுகவுடன் கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

திமுக கூட்டணியில்தான் காங்., இருப்பதாக <<19169713>>கே.சி.வேணுகோபால்<<>> உறுதிப்படுத்தியுள்ளார். திமுகவுடன் ஏற்பட்ட சலசலப்பால் காங்., தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள கே.சி.வேணுகோபால், கட்சியினர் தேவையற்ற கருத்துகளை கூறுவதால், இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு காங்கிரசின் நலன் பாதிக்கப்படும். எனவே, இனி யாரும் திமுகவுக்கு எதிராக பேசக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News February 17, 2026
3.71 லட்சம் மகளிருக்கு.. தமிழக அரசு அசத்தல் செய்தி

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 லட்சம் வரை மதிப்பிலான வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவு கட்டணம் 1 % குறைக்கப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் 3,71,705 பெண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.


