News January 31, 2026

திமுகவில் 4 அதிகார மையங்கள்: EPS

image

திமுக ஆட்சியில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என 4 அதிகார மையங்கள் உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். கொள்ளையடிப்பதில் நம்பர் ஒன் அரசு, திமுக அரசுதான்; கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ₹4.5 லட்சம் கோடியை திமுக அரசு கொள்ளையடித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், வரும் தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கும், சர்வாதிகாரத்திற்கும் முடிவுகட்டி, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

Similar News

News February 4, 2026

BREAKING: தங்கம் விலையில் சவரனுக்கு ₹5,040 உயர்ந்தது

image

தங்கம் விலை சவரனுக்கு ₹22,800 வரை குறைந்த நிலையில், மீண்டும் நேற்று முதல் உயரத் தொடங்கியது. இந்நிலையில், இன்றும் (பிப்.4) சவரனுக்கு ₹5,040 உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1 கிராம் தங்கம் விலை ₹630 உயர்ந்து ₹14,900-க்கும், சவரன் ₹5,040 அதிகரித்து ₹1,19,200-க்கும் விற்பனையாகிறது.

News February 4, 2026

கடலில் 4 கி.மீ நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்!

image

குடும்பத்தை காப்பாற்ற ஆஸி.,யை சேர்ந்த 13 வயது சிறுவன் தனது உயிரை பணயம் வைத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. படகு சவாரி சென்ற போது, படகு கவிழ்ந்து சிறுவனின் தாய் & சகோதரர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். சற்றும் தாமதிக்காத ஆஸ்டின் ஆப்பிள்பை, கடலில் சுமார் 4 கி.மீ நீந்தி சென்று அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

News February 4, 2026

நெல்லையப்பர் கோயிலில் தீண்டாமை? நிர்வாகம் மறுப்பு

image

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலின் சமபந்தி விருந்தில் நரிக்குறவர் இன சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், இவை வெறும் வதந்தி என கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விருந்தில் எந்த சமூகத்தையோ, இனத்தையோ சேர்ந்தவர்களையும் புறக்கணிக்கவில்லை என விளக்கமளித்து, நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு உணவு வழங்கவில்லை என்ற புகாரை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

error: Content is protected !!